இந்த சீசன் முழுக்க தாங்கி சென்றது ஆரி மற்றும் பாலா தான். அவர்கள் இருவரின் சண்டை இல்லையென்றால் ரொம்ப மொக்கையா இருந்திருக்கும். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் நடிகர் கமல் ஹாசன் , என்ன செஞ்சுட்டாங்க இவங்க...? என்ன தகுதி இருக்கு இவங்க இங்க வர...? எதன் அடிப்படையில் இவர்களுக்கு ஒட்டு போடுவாங்க என்கிற கேள்வி பலருக்கும் இருப்பதை நான் உணருகிறேன்.
அதையடுத்து இரண்டாவது ப்ரோமோவில் டிக்கெட் டூ ஃபைனல் டாஸ்கில் சோம் சேகர் வெற்றி பெற்று நேரடியாக ஃபைனல் ரவுண்டிற்கு சென்றுள்ளார். அப்போ நிச்சயம் ஆரி தான் வெற்றியாளர் என மக்கள் உறுதியாக கணித்துவிட்டனர். சோம் ஃபைனலுக்கு சந்தோஷம். ஆனால், ஏனோ அவர் மனதில் பதியவில்லை. ஏனென்றால் அவர் மக்கள் முன் எந்த உணர்ச்சிகளையும் ரொம்ப பகிரவில்லை.