இயக்குனர் சங்கத்துக்குத் தலைவரான பின்பு முதல் வேலையாக பாரதிராஜா நடிகர் சங்கத் தேர்தலில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். விஷாலின் பாண்டவர் அணிக்கு எதிராக பாரதிராஜாவின் சிஷ்யர் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி போட்டியிடுகிறது. இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா ‘ நடிகர் சங்கத் தேர்தலில் எனது சிஷ்யர் பாக்யராஜ் அணி வெல்ல வேண்டும் என நினைக்கிறேன். நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு வருவதற்கான முழுத்தகுதியும் உள்ளவர் பாக்யராஜ்’ எனக் கூறியுள்ளார். ஏற்கனவே விஷால் தலைமையிலான அணி மீது துணைநடிகர்கள், நாடக நடிகர்கள் மற்றும் கடந்த தேர்தலில் விஷால் அணியில் இருந்தவர்கள் உள்பட எல்லோரும் அதிருப்தியில் உள்ள நிலையில் இப்போது பாரதிராஜாவும் அவருக்கு எதிராகக் களமிறங்கியுள்ள நிலையில் விஷால் அணிக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.