நாசரை எதிர்த்து பாக்யராஜ் போட்டி! ஒரு ஓட்டுக்கு இவ்வளவு ரூபாயா?

சனி, 8 ஜூன் 2019 (15:05 IST)
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019-2022 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 23-ந்தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரம், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.

 
இந்த தேர்தலில் நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ் மீண்டும் நிற்கிறார். இதற்கிடையில் நடிகர் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு நடிகர் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் போட்டியிடுகின்றனர். 
 
இதனையடுத்து செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகைகள் குஷ்பு, லதா, கோவை சரளா, ஸ்ரீமன், பசுபதி, ரமணா, நந்தா, தளபதி தினேஷ், சோனியா, குட்டி பத்மினி, பிரேம், தினேஷ், மனோபாலா, ஆதி, ஜெரால்டு, காளிமுத்து, ரத்னப்பா, எம்.ஏ.பிரகாஷ், அஜய்ரத்னம், பிரசன்னா, ஜூனியர் பாலையா போன்ற பல பிரபலங்கள் போட்டியிடுகின்றனர். இதனால் நடிகர் சங்க தேர்தல் பரபரப்பாகி உள்ளது.

பொதுத் தேர்தலைபோலவே கடந்தமுறை பெரும்  கவனம் பெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் இம்முறையும் பொதுத் தேர்தலைபோல பணப்பட்டுவாடா நடக்கும் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. ஒரு ஓட்டிற்கு மட்டும்  ஐந்தாயிரத்திற்கு மேல் பணம் தரப்படும் என்று கூறப்படுகிறது. இதெல்லாம் ஒரு யூகத்தில் தான் சொல்லபடுகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்