தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்தெடுப்பதற்கான தேர்தலில் பாண்டவர் அணி சார்பில், நாசர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். விஷால் பொதுசெயலாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார். கார்த்தி பொருளாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார். துணைத்தலைவர் பதவிக்கு பூச்சி முருகன்,கருணாஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் தற்போது பாண்டவர் அணியை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் போட்டியிடுகிறார். அவர் அணியில் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், துணைத்தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிடவுள்ளனர். பொருளாளர் பதவிக்கு பாண்டவர் அணியைச் சேர்ந்த கார்த்தியை எதிர்த்து பிரசாந்த் போட்டியிடுகிறார்.இவர்கள் அணிக்கு ’சுமாமி சங்கரதாஸ் அணி’ என்று பெயரிட்டுள்ளனர்.