எக்ஸ்குளூஸிவ்: அரசியல் கட்சியில் ஐக்கியமாகும் பரணி?

திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (15:50 IST)
‘பிக் பாஸ்’ மூலம் பிரபலமான பரணி, அரசியல் கட்சியில் ஐக்கியமாக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.



 
‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்பார்கள். இந்தப் பழமொழி யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ… சினிமாக்காரர்களுக்கு நன்றாகவே பொருந்தும். அந்த வரிசையில், ‘பிக் பாஸ்’ மூலம் புகழ்பெற்ற பரணியும் இணைந்துள்ளார்.

‘கல்லூரி’ படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான பரணி, ‘நாடோடிகள்’ படத்தின் மூலம் தெரிந்த முகமானார். அதற்குப் பின் சில படங்களில் அவர் நடித்தாலும், சொல்லிக் கொள்கிற மாதிரியாக எதுவும் இல்லை. இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பரணி, அங்கு இருக்கப் பிடிக்காமல் சுவர் ஏறிக்குதித்து தப்பியோட முயன்றார். அத்துடன், அவர்மீது பாலியல் குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டன.

எனவே, ‘பிக் பாஸ்’ வீட்டைவிட்டு வெளியேறிய பரணி, அந்தப் புகழை வைத்து ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் ஐக்கியமாகிவிடத் துடிக்கிறார். அதனால், சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதிப் பக்கம் அடிக்கடி இவரைக் காண முடிகிறது. அத்துடன், அரசியல்வாதிகள் மத்தியில் புகழ்பெற்ற நாயர் மெஸ்ஸில் தான் தினமும் மதிய உணவு சாப்பிடுகிறார் பரணி. அவருடன் சில அரசியல்வாதிகளையும் காண முடிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்