பிரபல நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ், 80 மற்றும் 90-களில் பல படங்களை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார்.
விருப்பம் இல்லாமல் குண்டான பெண்ணை மணந்து தவிக்கும் இளைஞன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி சின்ன வீடு என்ற திரைப்படத்தை பாக்யராஜ் ,இயக்கி இருந்தார். இப்படம் 1985-ல் வெளியானது. இந்த படத்தில் பாக்யராஜே கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். ஊர்வசியின் அக்காள் கல்பனா கதாநாயகியாக நடித்து இருந்தார். அனு இன்னொரு நாயகியாக வந்தார்.
இந்த படம் அன்றைக்கு வசூலில் சக்கைபோடு போட்டது, இந்நிலையில் 2010ம் ஆண்டு ‘சித்து பிளஸ்-2’ படத்தை இயக்கினார். அதன் பிறகு எந்த படத்தையும் இயக்காமல் இருந்தார் பாக்யராஜ். இப்போது, சின்ன வீடு 2ம் பாகம் படத்தை இயக்க முடிவு செய்துள்ளதுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.