திருப்பாச்சிக்குப் பிறகு தங்கச்சி செண்ட்டிமெண்ட்டை கையில் எடுக்கும் விஜய்!

திங்கள், 28 பிப்ரவரி 2022 (16:42 IST)
விஜய்யின் பீஸ்ட் படத்தில் அவரின் தங்கையாக அபர்ணா தாஸ் நடித்து வருகிறார்.

தளபதி விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏபரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அரபி குத்து பாட்டு ஒன்று பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகி உள்ளது.

இந்நிலையில் படத்தைப் பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் விஜய்க்கு தங்கையாக அபர்ணா தாஸ் என்ற நடிகை நடிக்கிறார். படத்தில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் எனவும், அவர்களுக்கு இடையிலான செண்ட்டிமெண்ட் காட்சிகள் கவனம் ஈர்க்கும் விதமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. கடைசியாக விஜய் திருப்பாச்சி படத்தில் தங்கை செண்ட்டிமெண்ட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்