மீண்டும் களத்தில் இறங்கும் அன்புச்செழியன்.,. முன்னணி ஹீரோக்களை வைத்து 5 படங்கள்!

திங்கள், 28 பிப்ரவரி 2022 (16:37 IST)
பிரபல பைனான்சியர் அன்புச் செழியன் இப்போது மீண்டும் படத்தயாரிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளார்.

சினிமா பைனான்சியராக தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்தவர் அன்புச் செழியன். ஒரு கட்டத்தில் அவர் கோபுரம் பிலிம்ஸ் சார்பாக சொந்தமாக படங்களைக் கூட தயாரிக்க ஆரம்பித்தார். ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் படத்தயாரிப்பை நிறுத்திவிட்டு பைனான்ஸ் மற்றும் விநியோகம் ஆகிய பணிகளை மட்டுமே மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் படத்தயாரிப்பில் ஈடுபட உள்ளார். வரிசையாக அடுத்து ஐந்து படங்களைத் தயாரிக்க உள்ளார். அந்த படங்களில் இரண்டில் சந்தானம் கதாநாயகனாகவும், ஒரு படத்தில் தனுஷ் கதாநாயகனாகவும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்