பகாசூரன் படம் பற்றி ட்வீட் செய்த பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்!

திங்கள், 20 பிப்ரவரி 2023 (08:35 IST)
மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள பகாசூரன் திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது.

பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் பகாசூரன். மோகன் ஜியின் முந்தைய படங்களில் வெளிப்பட்ட ஜாதி சார்ந்த பார்வைக்காக பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தப் படம் குறித்தும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் படம் வெளியாகியுள்ள கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இந்த படம் பற்றி ட்வீட் செய்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. இதுபற்றிய அவரின் ட்வீட்டில் “பகாசூரன் திரைப்படம் நல்ல விமர்சனங்களை நான் கேட்டு வருகிறேன். வாழ்த்துகள் என்னுடைய நண்பர் நட்ராஜ் மற்றும் இயக்குனர் செல்வராகவன்” எனக் கூறியுள்ளார்.

இந்த ட்வீட் சம்மந்தமாக படத்தின் பிற்போக்குத் தனங்கள் பற்றி தெரியாமல் அனுராக் காஷ்யப் ட்வீட் செய்துள்ளர் என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்