சினிமாவில் 16 ஆண்டுகளை நிறைவு செய்த கார்த்தி… ரசிகர்கள் வாழ்த்து மழை!

வியாழன், 23 பிப்ரவரி 2023 (11:00 IST)
2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி கார்த்தி நடிகராக அறிமுகமான பருத்தி வீரன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிவாஜி கணேசனுக்கு பிறகு முதல் படத்திலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நாயகனாக கார்த்தி மாறினார். இந்த படத்தில் நடித்ததற்காக பிரியா மணிக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த படத்தைப் பார்த்து பிரமித்துப் போன பாரதிராஜா ‘என்னை எல்லோரும் கிராமிய இயக்குனர் என்கின்றனர். ஆனால் என்னால் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியவில்லையே என நான் ஆதங்கப்பட்டேன்’ எனக் கூறி பாராட்டினார். இந்நிலையில் பருத்தி வீரன் ரிலீஸாகி இன்று 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கிய அடையாளங்களில் ஒருவராக இன்று கார்த்தி வளர்ந்து வந்திருக்கிறார். தமிழ் தாண்டியும் தெலுங்கிலும் அவருக்கென ரசிகர் கூட்டம் உள்ளது. பருத்திவீரனுக்குப் பிறகு ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, மெட்ராஸ், கொம்பன், பொன்னியின் செல்வன், விருமன் என ஏகப்பட்ட ஹிட் படங்களைக் கொடுத்துள்ள கார்த்திக்கு இந்த மைல்கல் சாதனையை ஒட்டி திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்