மகிழ்மதியிலும் மாஸ்க் அணிவது கட்டாயம் - ராஜமௌலி வெளியிட்ட வீடியோ!

சனி, 27 ஜூன் 2020 (09:56 IST)
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு மேலும் நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதையடுத்து தனிமனிதர் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்க அரசாங்கம் அறிவுறுத்தி வருகிறது. மேலும் திரை பிரபலங்கள் , விளையாட்டு வீரர்கள் , அரசியல் தலைவர்கள் என ஆளுமைகொண்ட பெரிய ஆட்கள் பொதுமக்களுக்கு கொரோனா தொற்றிலிருந்து நம்மை நான் பாதுகாத்துக்கொள்ள விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்ப்போது பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில், "பாகுபலி இரண்டாம் பாக கிளைமாக்ஸில் பிரபாஸ் மற்றும் ராணா மோதிக்கொள்ளும் சண்டை காட்சியில் இருவரும் மாஸ்க் அணிந்து இருப்பது போல் இந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ள வீடியோவை வெளியிட்டு "மகிழ்மதியிலும் மாஸ்க் அணிவது கட்டாயம். நீங்களும் மறந்து விடாதீர்கள்" என கண்டிப்புடன் கூறி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ மக்கள் பத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Good job @avitoonindia and @coollazz #Unitedsoft VFX Studio team! #BBVsCOVID #IndiaFightsCorona #StaySafe

I hope everyone stays safe and exercise caution in these times. pic.twitter.com/kmhOyK3012

— rajamouli ss (@ssrajamouli) June 26, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்