பாகுபலி 2 முதல் வார வசூல் சாதனை!

செவ்வாய், 2 மே 2017 (10:20 IST)
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான படம்  ‘பாகுபலி-2’. ராஜமௌலியின் பாகுபலி பட பாக்ஸ் ஆபிஸ் சாதனைகள் தான் இப்போது அனைவரின் பேச்சே. பாக்ஸ் ஆபிஸில் பல முன்னணி நடிகர்களின் பட சாதனைகளை இந்த படம் முறியடித்து வருகிறது.

 
இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாகத்தின் சாதனை பாகுபலி2 இரண்டாம் பாகம் முறியடித்திருக்கிறது. பாகுபலி 2  ரிலீஸான மூன்று நாட்களில் உலக அளவில் ரூ. 540 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் ரூ. 415 கோடியும்,  வெளிநாடுகளில் ரூ. 125 கோடியும் வசூலித்துள்ளது.
 
பாகுபலி 2 படம் மொத்தம் 828 ஷோக்கள் ஓடியிருக்கிறது. முதல் வார முடிவில் சென்னையில் மட்டும் ரூ. 3 கோடி வரை  வசூல் சாதனை செய்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்