எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், ரோகிணி, ஆகியோர் நடிப்பில் பாகுபலி 2வது பாகம் சுமார் ரூ.120 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வருகிற ஏப்ரல் 28ம் தேதி படம் வெளியாக உள்ளது. படத்தின் டிரைலர் வெளியான முதல் நாளில் 5 கோடி பேர் பார்த்து ரசித்தனர்.
இதில் பாகுபலி2-ல் நடித்த நடிகர்கள், ஹாலிவுட், டோலிவுட், கோலிவுட், இந்தி சினிமாவில் இருந்து பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியை முதம் முறையாக 360 டிகிரி கோணத்தில், 4கே-வில் ஒளிப்பரப்பினார்கள். மேலும் யூ-டியூப்பில் நேரடியாக ஒளிப்பரப்பப்பட்டது.