ஹரிஷ் கல்யாண் & அட்டகத்தி தினேஷ் நடிக்கும் புதிய படம்… 90ஸ் கிட்ஸின் நாஸ்டால்ஜியா தலைப்பு

சனி, 4 மார்ச் 2023 (08:39 IST)
தற்போது வளர்ந்துவரும் நடிகர்கள் கண்டிப்பாக வித்தியாசமாக ஏதாவது கதைக்களங்களில் நடித்துதான் ஹிட் கொடுக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். சமீபத்தில் இப்படி வெளியான டாடா திரைப்படம் ஹிட் ஆனது. இந்நிலையில் இப்படி ஒரு படமாக உருவாகி வருகிறது ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிக்கும் லப்பர் பந்து என்ற திரைப்படம்.  இந்த படத்தில் கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி சீரிஸில் நடித்து புகழடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். இயக்குனர் அருண்ராஜா காமராஜின் இணை இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார்.

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தின் தலைப்பே இளைஞர்களை வெகுவாகக் கவரும் விதமாக வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில் அட்டகத்தி தினேஷ் தவிர மற்றவர்கள் கலந்துகொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்