41வது கதைக்கும் தூங்கியிருக்கலாம்: அஸ்வினின் ‘என்ன சொல்ல போகிறாய்’ டுவிட்டர் விமர்சனம்
வியாழன், 13 ஜனவரி 2022 (13:29 IST)
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் நடித்துள்ள என்ன சொல்ல போகிறாய் என்ற திரைப்படம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில் ட்விட்டரில் இந்த படத்தின் விமர்சனங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன
இந்த படம் வழக்கம் போல் ஒரு காதல் பிரேக் அப் கதை என்றும் அதன் பின்னர் ஏற்படும் இரண்டாவது காதல் இரண்டாவது பாதியில் உள்ளது என்றும் கூறப்படுகிறது
முதல் பாதி ரசிக்கும்படியாகவும் இளைஞர்களையும் காதலர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது என்றும் ஆனால் இரண்டாவது பாதி அதற்கு நேர் எதிராக போரடிப்பதாக உள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
இந்த படத்தின் பிளஸ் பாயிண்டுகள் என்றால் அஸ்வின் நடிப்பு மற்றும் விவேக் மெர்வின் இசை என்றும் சொதப்பல் ஆனது என்றால் இரண்டாவது பாதியில் திரைக்கதை என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்
புகழ் காமெடி ரசிக்கும் வகையில் இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் மொத்தத்தில் இந்த படம் வெகு சுமாரான படம் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன
40 கதைகளை கேட்டு தூங்கி விட்டேன் என்றும் இந்த கதைதான் எனக்கு பிடித்திருக்கிறது என்றும் கூறிய அஸ்வின் இந்த கதைக்கும் தூங்கி இருக்கலாம் என்று ஒருசில ட்விட்டர்வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்