பிரதமர் மோடி மீது விமர்சனம்; தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய பாஜகவினர் கைது!
வியாழன், 13 ஜனவரி 2022 (09:08 IST)
பல்லடத்தில் பிரதமர் மோடியை விமர்சித்த தள்ளுவண்டி வியாபாரியை பாஜகவினர் தாக்கியதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தள்ளுவண்டியில் உணவு பொருட்கள் விற்பனை செய்து வரும் வியாபாரி ஒருவர் பிரதமர் மோடி குறித்து அதிருப்தியுடன் பேசியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த பாஜகவினர் சிலர் வியாபாரியை மூர்க்கமாக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், பாஜக இளைஞரணி நிர்வாகி ரமேஷ் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தாராபுரம் சிறையில் அடைத்துள்ளனர்.