சித்தார்த் நிஜ கிரிக்கெட் வீரர் போலவே இருக்கிறார்… டெஸ்ட் பட டிரைலரைப் பாராட்டிய அஸ்வின்!

vinoth

வெள்ளி, 14 மார்ச் 2025 (12:05 IST)
தமிழ்ப்படம், காவியத்தலைவன், ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த ஒய்நாட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும்  டெஸ்ட் என்ற படத்தில் சித்தார்த், மீரா ஜாஸ்மின் மற்றும் மாதவன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் கிரிக்கெட் சம்மந்தப்பட்ட கதைக்களம் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சில முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டன. ஷூட்டிங் முடிந்தும் பல மாதங்கள் ரிலீஸாகாமல் இருந்த இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் ஏப்ரல் 4 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தில் சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும், மாதவன் புக்கீயாகவும், நயன்தாரா சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் சாதாரண பெண் வேடத்திலும் நடித்துள்ளார் என தெரிகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ரிலீஸான இந்த படத்தின் டீசர் பற்றி பேசியுள்ள கிரிக்கெட் வீரர் அஸ்வின் “டெஸ்ட் படத்தில் சித்தார்த்தைப் பார்ப்பதற்கு வருடக் கணக்கில் கிரிக்கெட் விளையாடிய வீரர் போல இருக்கிறார். இந்த படத்துக்காக அவர் தயாராகி இருக்கும் விதம் கிரிக்கெட் மீது அவருக்கிருக்கும் காதலையும், கிரிக்கெட் பற்றிய அறிவும் தெரிகிறது. கண்டிப்பாக இந்த படம் அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமானப் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்