பா ரஞ்சித் படத்தில் வில்லனாக இணையும் ஆர்யா!

vinoth

புதன், 9 அக்டோபர் 2024 (09:29 IST)
தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர் பா.ரஞ்சித். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான  அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை அடுத்து, மெட்ராஸ், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கபாலி, காலா ஆகிய படங்களை அடுத்து, ஆர்யாவுடன் சட்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களை இயக்கினார்.

சமீபத்தில் விக்ரம் நடிப்பில்  தங்கலான் படத்தை இயக்கி வெளியிட்டார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதையடுத்து ரஞ்சித் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் ஒரு கேங்ஸ்டர் கதையை இயக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த படத்தில் வில்லனாக நடிகர் ஆர்யா நடிக்கவுள்ளாராம். மேலும் அசோக் செல்வனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்