பிரபல நடிகரின் அடுத்த படத்தில் அருண்விஜய் மகன்: அதிகாரபூர்வ அறிவிப்பு

திங்கள், 14 டிசம்பர் 2020 (08:31 IST)
பிரபல நடிகரின் அடுத்த படத்தில் அருண்விஜய் மகன்: அதிகாரபூர்வ அறிவிப்பு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் வாரிசுகள் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில திரைப்படங்களில் அறிமுகம் ஆகி வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம் 
 
ஜெயம்ரவியின் மகன் ’டிக் டிக் டிக்’ என்ற படத்திலும் விஜய் சேதுபதியின் மகன் ’ஜூங்கா’ படத்திலும் ஏற்கனவே அறிமுகமான நிலையில் தற்போது அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் பிரபல நடிகரின் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் 
 
பிரபல நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்க அர்னவ் விஜய் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை அருண் விஜய் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார் 
 
அர்னவ் விஜய் நடிக்க இருக்கும் படம் குறித்த முழு விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஜயகுமார் குடும்பமே ஒரு நட்சத்திர குடும்பம் என்ற நிலையில் தற்போது விஜயகுமாரின் பேரனும் அருண்விஜ்ய்யின் மகனுமான அர்னவ் விஜய்யையும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்