கை மாறுகிறது ’அருவா’ திரைப்படம்: சூர்யாவுக்கு பதில் அருண்விஜய்?

ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (08:39 IST)
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகவிருந்த ‘அருவா’ படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வந்தது. ஏற்கனவே சூர்யாவை வைத்து ஐந்து ஹிட் படங்களை கொடுத்து உள்ள ஹரி இந்த படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்தால் ரசிகர்கள் குஷியாகினர்.
 
மேலும் இந்த படம் ஆரம்பிக்க முன்னரே இந்த படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமை விற்பனை செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த படம் ட்ராப் ஆகி விட்டதாகவும் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன 
 
கை மாறுகிறது ’அருவா’ திரைப்படம்
இயக்குனர் ஹரி கூறிய அருவா படத்தின் கதை சூர்யாவுக்கு திருப்தி இல்லை என்றும் அதனால் அவர் விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ’அருவா’ படம் டிராப் இல்லை என்றும் சூர்யாவுக்கு பதில் அருண்விஜய் நடிக்கவிருப்பதாகவும் ஹரி தரப்பினர் கூறுகின்றனர். இந்த படத்தை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு இந்த படத்தை வெற்றி அடையச் செய்து சூர்யாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே ஹரியின் எண்ணமாக உள்ளதாக அவரது தரப்பினர் தெரிவித்து வருகின்றனர் 
 
அருவா’ படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் ஆரம்பிக்கும் என்றும் முன்னணி நடிகை நாயகியாகவும், பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாகவும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தத் திரைப்படம் ரூபாய் 50 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்