யானை சென்ஸார் & டிரைலர் எப்போது? அருண் விஜய் பகிர்ந்த தகவல்!

புதன், 18 மே 2022 (14:40 IST)
அருண் விஜய் முதல் முறையாக அவருடைய அக்கா கணவர் ஹரி இயக்கும் யானை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு முன்னதாக சூர்யாவை வைத்து அருவா படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஹரி. ஆனால் அந்த படம் ட்ராப் செய்யப்பட்ட நிலையில் அருண் விஜய்யோடு இணைந்தார்.

இந்நிலையில் யானை திரைப்படம் மே 6 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் ரிலீஸ் தேதி ஜூன் 17க்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் “யானை சென்சாருக்கு தயாராகி வருகிறது. விரைவில் டிரைலர் வெளியாகும்” என அருண் விஜய் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arun Vijay (@arunvijayno1)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்