இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் பற்றி தயாரிப்பாளர் போனி கபூர் “தீபாவளிக்கு AK 61 ரிலீஸ் ஆகும், அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது” எனக் கூறியுள்ளார்.