அருள்நிதியின் ’டைரி’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செவ்வாய், 13 ஜூலை 2021 (14:00 IST)
வம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகர் அருள்நிதி அதன் பின்னர் உதயன், மௌனகுரு, தகராறு உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். இந்த நிலையில் தற்போது அவர் ’களத்தில் சந்திப்போம்’ மற்றும் ’டைரி ஆகிய இரண்டு திரைப்படங்களை நடித்து வருகிறார் என்பதும் இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தருவாயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன்னர் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் டைரி திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. டைரி திரைப்படத்தின் டீசர் ஜூலை 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இன்னாசி பாண்டியன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ரான் யதான் யோஹன் இசையமைத்து உள்ளார் என்பதும் அரவிந்த் சிங் ஒளிப்பதிவில் ராஜா ராஜா சேதுபதி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை 5 ஸ்டார் கதிரேசன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் விரைவில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகவுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்