இரண்டு மாதங்களில் மூன்று படம் ரிலீஸ்: அருள்நிதியின் ‘டைரி’ ரிலீஸ் தேதி!

வெள்ளி, 15 ஜூலை 2022 (19:09 IST)
அருள்நிதி நடித்த டி பிளாக் என்ற திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி வெளியான நிலையில் ஜூலை 22ஆம் தேதி அவர் நடித்த மற்றொரு திரைப்படமான தேஜாவு என்ற படம் வெளியாக உள்ளது
 
 இந்த நிலையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி அருள்நிதி நடித்த டைரி என்ற திரைப்படம் வெளியாக இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரான் எதான் யோஹான் இசை அமைத்துள்ளார்.
 
 அரவிந்த்சிங் ஒளிப்பதிவில் ராஜா சேதுபதி படத்தொகுப்பில் உருவாகிய இந்த படம் அருள்நிதியின் மற்றொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்