அருள்நிதியின் ‘டிபிளாக்’ ஸ்னீக்பீக் வீடியோ ரிலீஸ்

வெள்ளி, 17 ஜூன் 2022 (17:25 IST)
அருள்நிதி நடித்த ‘டிபிளாக்’ திரைப்படம் வரும் ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர் 
 
அருள்நிதி கல்லூரியில் படிக்கும்போது நாயகி கூட்டத்தில் முண்டி அடித்து பஜ்ஜி வாங்கிக் கொண்டு வருவது போன்ற காட்சிகளும் அது சம்பந்தமான உரையாடலும் இந்த இரண்டு நிமிட வீடியோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அருள்நிதி, அவந்திகா, கருபழனியப்பன், தலைவாசல் விஜய், ரமேஷ்கண்ணா, உமா உள்பட பலர் நடித்த இந்தப்படத்தை விஜயகுமார் ராஜேந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். ரான் யதான் யோஹனன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்