பீட்டர் பீட்ட ஏத்து, மாயா மாயா, சர்வம் தாள மயம், வரலாமா, டிங்கு டாங்கு, மாக்இலாரா ஆகிய 6 பாடல்களின் டிராக் லிஸ்ட் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தில்,ஜிவி பிரகாஷ் உடன் நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி, வினீத், டிடி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மிருதங்க வித்வான் ஒருவரிடம் இருந்து கலையை கற்றுக்கொள்ள விரும்புகிறான் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன். அவனுடைய நிலையைக் காரணம் காட்டி வித்வானிடம் இருந்தும், கர்நாடக இசை சமூகத்தில் இருந்தும் நிராகரிக்கப்படுகிறான் அவன். சாதிப் பிரச்சினையைத் தாண்டி அவனின் இசை ஆசை நிறைவேறியதா என்பதுதான் படத்தின் கதை. டிசம்பர் வெளியீடாக இப்படம் திரைக்கு வரவுள்ளது. முன்னதாக 31வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது.