கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்சாரக்கனவு போன்ற அழகிய காதல் திரைப்படங்களை இயக்கிய ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் நீண்ட இடவெளிக்குப் பிறகு தற்போது ஜிவி பிரகாஷை வைத்து சர்வம் தாள மயம் என்ற ஒரு புதிய படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ஜிவி பிரகாஷ் ஒரு இசைக் கலைஞராகவே நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மகேஷிண்ட பிரதிகாரம், 8 தோட்டாக்கள் படங்களில் நடித்த அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். ஏ ஆர் ரஹ்மான் முதல் முறையாக ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தி திரையுலகில் பரபரப்பாக இயங்கி வரும் ரவி யாதவ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.