மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் - சிம்பு நடித்துள்ள தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் ஐகானிக் இயக்குனரான மணிரத்னத்தின் இயக்கத்தில் முதல்முறையாக சிம்பு - கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படம் தக் லைஃப். இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட்ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு மணிரத்னத்தின் ஆதர்ச இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
நாயகனுக்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் இணையும் படம் என்பதாலும், சிம்பு - கமல்ஹாசன் முதல்முறையாக இணையும் படம் என்பதாலும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர் வெளியானபோதே இளம் கமல்ஹாசன் தோற்றம் போன்றவை வைரலாகியிருந்தது.
இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. ஜூன் 6ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளும் வேகமாக நடந்து வருகின்றது.
Edit by Prasanth.K