இந்த நிலையில் கோட் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், கோட் திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு அனுமதி அளித்த ஆவணத்தையும் அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து கோட் திரைப்படம் முதல் நாள் முதல் காட்சி 9 மணிக்கு தமிழகத்தில் தொடங்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.