அரவிந்த் சாமி நடிக்கும் கள்ளபார்ட்… வெளியான சென்சார் தகவல் & ரிலீஸ் தேதி!

புதன், 1 ஜூன் 2022 (11:10 IST)
அரவிந்த் சாமி நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாக்கத்தில் இருக்கும் கள்ளபார்ட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடல், தனி ஒருவன் மற்றும் போகன் ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர் அரவிந்த் சாமி மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். இந்நிலையில் என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கும் கள்ளபார்ட் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ரெஜினா கதாநாயகியாக நடித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்த இந்த திரைப்படம் தற்போது ரிலீஸை நெருங்கியுள்ளது. வரும் ஜூன் 24 ஆம் தேதி கள்ளபார்ட் திரைப்படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்துக்கு சென்சாரில் UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்