சங்கமித்ரா படத்தில் இணையும் பேன் இந்தியா ஹீரோயின்!

செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (08:25 IST)
ஜெயம்ரவி, ஆர்யா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்த திரைப்படம் சங்கமித்ரா. இந்த படம் கடந்த 2017 ஆம் ஆண்டு தயாரிக்க திட்டமிடப்பட்டது என்பதும் 2018ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில் இந்த படம் கால தாமதமாகி வருவதை அடுத்து அவர் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இந்த நிலையில் ஐந்து ஆண்டுகள் கழித்து தற்போது லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் டைட்டில் ரோலான சங்கமித்ரா வேடத்தில் பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்கு இந்த படத்துக்காக பெரிய தொகை சம்பளமாகக் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேல்ய்ம் ஜெயம் ரவியும் விலக, அவர் வேடத்தில் விஷால் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்