சிபிராஜின் அடுத்த பட டீசரை வெளியிடும் ஏ.ஆர்.ரஹ்மான்!

வியாழன், 12 நவம்பர் 2020 (10:40 IST)
சிபிராஜின் அடுத்த பட டீசரை வெளியிடும் ஏ.ஆர்.ரஹ்மான்!
நடிகர் சிபிராஜ் நடித்து வந்த ’கபடதாரி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த படம் டிசம்பர் அல்லது ஜனவரியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளன. ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது 
 
’கபடதாரி’ படத்தின் டீஸரை நவம்பர் 13ஆம் தேதி அதாவது நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சிபிராஜ் ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடிக்கும் இந்த படத்தை தனஞ்செயன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கியுள்ளார் என்பதும், இந்த படத்தின் டீசரை ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்கள் டுவிட்டர் தளத்தில் வெளியிட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்