இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அனுஷ்கா சர்மா, " எனது கணவர் விராட் கோலியின் உடைகளை நான் திருடி அணிகிறேன், உண்மையில் அவரது அலமாரியில் இருந்து பலவற்றை பயன்படுத்துகிறேன். பெரும்பாலும் டி-சர்ட் போன்ற துணி வகைகளை அதிகமாக திருடுகிறேன். அதோடு ஒரு சில நேரங்களில் அவருடைய ஜாக்கெட்டுகளை எடுத்து அணிந்துகொள்வேன். இப்படி நான் அவரது உடைகளை திருடி அணியும்போது விராத் மகிழ்ச்சி அடைகிறார் என கூறினார்.