நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் பெரும்பகுதி காட்சிகளை நடித்து முடித்துள்ளார். 70 வயதாகிவிட்ட அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் சினிமாவில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தை முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு சிகிச்சை சென்ற ரஜினி, சிகிச்சை முடிந்து இப்போது அண்ணாத்த படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்புக்கு தயாராகியுள்ளார்.