சிவா இயகத்தில் அஜித் நடித்துள்ள விவேகம் திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விவேகம் படத்தின் டிரைலர் வெளியிடப்படும் என்ற படக்குழுவினர் அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் டிரைலரை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போது வரை டிரைலர் வெளியீடு தேதி அறிவிக்கப்படவில்லை.