அனிருத் காப்பி அடித்த பாடல் பிரச்சனைக்கு முடிவு!

சனி, 4 ஜனவரி 2020 (21:40 IST)
தமிழ் சினிமாவில் உச்ச நடிகரான ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவருக்கும் இசைக் கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அனிருத் 'கிழி' என்ற தர்பார் பாட்டை காப்பி அடித்ததாக எழுந்த சர்ச்சைக்கு தற்போது முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் 9 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
 
இந்நிலையில்,  திரைப்பட இசைக் கலைஞர்கள்  சங்கம்  ரஜினி, அனிருத் இருவருக்கும் கண்டம் தெரிவித்துள்ளது.
 
அதில், தர்பார் படத்தில் 450 இசைக்கலைஞர்கள் பணியாற்றி இருகின்றனர். ஆனால் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தில் இருந்து 5 பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 
 
சங்கத்தில் உள்ள இசைக் கலைஞர்களுக்கு வாய்ப்பு தராததால் அனிருத்துக்கு இசையமைப்பாளர்கள் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
மேலும், திரைபட இசைக் கலைஞர் சங்க தலைவர் தினா கூறும்போது, பேட்ட படத்தின் போதே சங்க கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென கூறினேன். அப்போது அடுத்த படத்தில் வாய்ப்பு அளிப்பதாக கூறிய அவர் தர்பார் படத்தில் தரவில்லை என தெரிவித்தார்.
 
மேலும் , தொண்ணூறுகளில் பிரபல இசையமைப்பாளராக கொடிகட்டிப் பறந்த தேனிசைத் தென்றல் தேவா, இசைமயைத்த வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தில் வந்த தண்ணி கொடம் எடுத்து .... என்ற பாடலின் மெட்டு போலவே இதுவும் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது, தர்பார் படத்திற்கு அனிருத் உடன் தேவா இணைந்து இசை அமைத்துள்ளதாக இசை கலைஞர்கள்  சங்க தலைவர் தினா அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்