அனிமல் படத்தின் ரன்னிங் டைம் மூன்று மணிநேரத்துக்கு மேலா?

சனி, 18 நவம்பர் 2023 (12:27 IST)
விஜய் தேவரகொண்டா நடித்த ’அர்ஜுன் ரெட்டி’ என்ற படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா அதே படத்தை இந்தியில் ஷாகித் கபூர் நடிப்பில் ரீமேக் செய்து அதிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து அவரின் அடுத்த படமான அனிமல் படத்தில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து முடித்துள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இந்த பாடலில் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா ஆகிய இருவரும் நெருக்கமானக் காட்சிகளும், முத்தம் கொடுப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

டிசம்பர் மாதத்தில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இப்போது இந்த படத்தின் மூன்று மணிநேரம் 21 நிமிடம் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போதெல்லாம் 2 மணிநேரம் 30 நிமிடத்துக்கு மேல் இருந்தால் கூட ரசிகர்கள் படத்தின் நீளம் அதிகம் என சொல்லிவிடும் நிலையில் கிட்டதட்ட 3.30 மணிநேரம் என்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்