இதனால் கைதி படம் 250 தியேட்டர்களில் மட்டுமே வெளியானது. முதலிரண்டு நாட்களில் பிகில் படம் பெருவாரியாக கொண்டாடப்பட்டாலும் அதன் பிறகு அதன் கூட்டம் குறைய ஆரம்பித்தது. அதற்கு பிகில் படத்தில் வலுவான கதை இல்லாததே காரணம் என சொல்லப்பட்டது. ஆனால் வலுவான கதையம்சம் கொண்ட கைதி படத்துக்கு ஒரு வாரத்துக்குப் பிறகே கூட்டம் கூட ஆரம்பித்தது. இத்தனைக்கும் அந்த படத்தில் கதாநாயகி, பாடல்கள் போன்ற கமர்சியல் விஷயங்கள் இல்லை. வலுவான திரைக்கதை படத்தை தூக்கி நிறுத்தியது.