ஆனந்தம் விளையாடும் வீடு படத்தை முடித்த கௌதம் கார்த்திக்!

செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (16:57 IST)
பிரபல நடிகர் கௌதம் கார்த்திக் நடிக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இயக்குனர் நந்தா பெரியசாமி எழுதி இயக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் சேரன் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சில மாதங்களுக்கு வெளியிட்டுள்ளது படக்குழு. முழுக்க குடும்பத்துப் பின்னணியில் இந்தப் படம் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை படக்குழு முடித்துள்ளது.

இந்த படத்தில் நடிகர்கள் ஷிவத்மிகா ராஜசேகர், பாடலாசிரியர் சினேகன், சரவணன், டேனியல் பாலாஜி, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, மௌனிகா, மைனா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்