இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சன், ஒரு கட்டத்தில் கதாநாயகனாக நடிப்பதைக் குறைத்துக்கொண்டு வயதுக்கேற்ற பாத்திரங்களையும், நல்ல கதையம்சம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார். 80 வயதிலும் பிஸியான நடிகராக இருந்துவருகிறார்.
அவரின் மகனான அபிஷேக் பச்சன் மற்றும் மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் நடிப்புத்துறையில் தங்களுக்கென தனியிடத்தைப் பிடித்துள்ளனர். இந்நிலையில் அவரது குடும்பத்தில் இருந்து மற்றொரு நபரும் நடிப்பில் கால்பதிக்க உள்ளார். அமிதாப் பச்சனின் மகளான ஸ்வேதாவின் மகள் நவ்யா இப்போது விளம்பரப் படங்களில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். அவருக்கு பாலிவுட் பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.