எஸ்ஜே சூர்யா நடிக்க இருந்த திரைப்படம் உயர்ந்த மனிதன். இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான வேலைகளும் தொடங்கியது. ஆனால் இந்த படத்தில் அமிதாப் ஒரு காட்சியில் நடிக்கவில்லை. அதுமட்டுமின்றி இந்த படத்தின் கதை மற்றும் படமாக்கும் திறனில் தனக்கு அதிருப்தி இருந்ததாக அமிதாப் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. மேலும் படக்குழுவினருக்கும் அமிதாப்புக்கும் இடையே கருத்து மோதல் எழுந்ததாகவும் அதனால் படம் கிடப்பில் போடப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.