பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கலந்து கொண்ட சினிமா பிரபலங்களில் நடிகை பிந்து மாதவியும் ஒருவர். தமிழ் சினிமாவில் கலக்கிய பல நடிகர்கள் அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் ஆதரவையும், ரசிகர்களையும் பெற்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய போட்டியாளர்களுக்கு, சினிமாவில் வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. அவர்கள் பற்றி எந்த செய்தி வந்தாலும் பிக்பாஸ் பிரபலம் என்று தான் கூறுகிறார்கள். ஓவியா, சினேகன், ஹரிஷ், ரைசா, ஆரவ் என பலரும் படங்களில் கமிட்டாகி வரும் நிலையில் நடிகை பிந்து மாதவியும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார்.