விஐபி படத்தின் போது தனுஷுடன் அமலா பால் அடித்த கூத்து - வைரல் புகைப்படம்!

செவ்வாய், 17 டிசம்பர் 2019 (19:14 IST)
நடிகர் தனுஷின் திரைப்பயணத்தில் சூப்பர் ஹிட் கலெக்ஷனில் கல்லா கட்டிய படங்களுள் முக்கியமான படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படத்தில் முதல் பாகத்தை வேல்ராஜ் ராஜ் இயக்கி சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்தார். அதையடுத்து வெளிவந்த இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார். 
 
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார். மேலும் இவறலுடன் சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்ளின் ஏகோபித்த பாராட்டுகளை பெற்றிருந்தனர். விஐபி 2 படத்தில் தனுஷுடன் அமலாபால் பெயிண்டிங் அடித்து விளையாடுவது போன்ற ரொமான்டிக் காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கும். அந்த பாடலில் கூட இருவரும் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளதாக கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்டனர். 
இந்நிலையில் தற்போது அந்த காட்சியின் பொது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அமலா பால்  தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை மீண்டும் திசை திரும்பியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்