2வது திருமணம் கண்டிப்பாக உண்டு: அமலாபால்

செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (06:55 IST)
இயக்குனர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்ற நடிகை அமலாபால் தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அமலாபால் நடித்த 'விஐபி 2' ஓரளவு நல்ல வசூலை கொடுத்த நிலையில் விரைவில் அவர் நடித்த 'திருட்டுப்பயலே 2' வெளியாகவுள்ளது.



 
 
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது மறுதிருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். மறுதிருமணம் கண்டிப்பாக உண்டு என்றும், ஆனால் அதுகுறித்து பேசுவதற்கு இது சரியான நேரம் இல்லை என்றும் அமலாபால் கூறினார்.
 
வாழ்க்கையில் நாம் நினைக்கும் அனைத்துமே நடந்து விடுவதில்லை என்றும் மேடு பள்ளங்களால் ஆனதுதான் வாழ்க்கை என்றும் கூறிய அமலாபால், விஜய்யுடனான திருமண வாழ்வில் சந்தோஷமே இல்லை என்று நான் கூறமாட்டேன், ஆனால்  அதே நேரத்தில் மென்மையான மகிழ்ச்சியான வாழ்க்கை என்றும் கூறமுடியாது. 
 
எனக்கு வயது 25. இன்னும் சாதிக்க காலம் அதிகம் இருக்கிறது. அடுத்த கட்டத்துக்கு என்னை தயார்படுத்தி வருகிறேன். அனைவருடைய வாழ்க்கையிலும் சோதனை இருக்கும். கடுமையான பிரச்சினைகளையும் நான் சாதாரணமாக எடுத்துக்கொள்வேன்”
 
இவ்வாறு அமலாபால் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்