அனிமல் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமான அல்லு அர்ஜுன்!

vinoth

திங்கள், 29 ஜனவரி 2024 (07:27 IST)
விஜய் தேவரகொண்டா நடித்த ’அர்ஜுன் ரெட்டி’என்ற படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இப்போது ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து  அனிமல் படத்தை இயக்கியுள்ளார்.  இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். அனிமல் படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் இந்த படம் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

இந்நிலையில் சந்தீப் ரெட்டி வாங்கா அடுத்து இயக்கவுள்ள படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அடுத்தும் பாலிவுட் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனோடு இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன் அதன் பின்னர் திரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு சந்தீப் ரெட்டி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்