பிஎஸ்என்எல், ஏர்டெல், ஏர்செல், ரிலையன்ஸ், டாடா எல்லோரும் திருடர்கள்: ஆர்.கே.செல்வமணி ஆவேசம்
இந்த நிலையில் 'சகுந்தலாவின் காதலன்' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, மத்திய, மாநில அரசை வெளுத்து வாங்கினார்.
ஒரு விவசாயி தான் உற்பத்தி செய்த தக்காளியை வெறும் ஐந்து ரூபாய்க்குத்தான் விற்பனை செய்கிறார். ஆனால் அது மக்களிடம் போய் சேரும்போது ரூ.80 ஆகின்றது. கஷ்டப்பட்டு உழைத்த விவசாயியை விட அதிகம் லாபம் பார்ப்பது இடைத்தரகர்கள் தான். அதேபோல் தான் கஷ்டப்பட்டு ஒரு தயாரிப்பாளர் படம் எடுக்கின்றார். ஆனால் அதன் பலனை பலர் அனுபவிக்கின்றனர்.
மேலும் கஷ்டப்பட்டு படம் எடுப்பது தயாரிப்பாளர்கள். ஆனால் அதை திருட்டுத்தனமாக இணையதளத்தில் பதிவு செய்ய அனுமதிப்பதோடு, அதை பலர் டவுன்லோடு செய்யவும் பிஎஸ்என்எல், ஏர்டெல், ஏர்செல், ரிலையன்ஸ், டாடா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உடந்தையாக இருக்கின்றன. இந்த ஐந்து நிறுவனங்களும் திருடர்கள் என்று ஆர்.கே.செல்வமணி ஆவேசமாக தெரிவித்தார்.