தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் வினோத் இயக்கத்தில், அஜித்61 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கிற்கு இடைவெளி விடப்பட்டுள்ளதால், அஜித்குமார் தன் சக நடிகர்களுடன் இணைந்து வட மாநிலத்தில் பைக்கில் பயணம் சென்று வருகிறார்.
ஏற்கனவே, வட மாநிலத்தில், கார்கில் நினைவகத்துக்கு சென்று மரியாதை செலுத்திய அவரின் புகைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிவருகிறது.
இந்த நிலையில், புதிய இடங்களுக்கும்,பயணம் மேற்கொள்பவர்களும் இதுகுறித்து திட்டமிட்டு, சரியான காலத்தில் எந்தெந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும் எப்படி செல்ல வேண்டும் என திட்டம் வகுத்திருப்ப்பார்கள். அதேபோல் நடிகர் அஜித்குமார் தன் பயணத்தில், ஒரு வரைபடத்தைப் பயன்படுத்தி வருகிறார்.