தீபாவளிக்கு ரிலீஸ் உறுதி… முழு நம்பிக்கையில் விடாமுயற்சி படக்குழு!

vinoth

ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (08:37 IST)
அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முடிந்தது.

இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதோடு மொத்த ஷூட்டிங்கும் முடியவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் பாதிக்கு மேல் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது எடுக்கும் காட்சிகளுக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை முடித்து படத்தை எப்படியும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்துவிடவேண்டும் என்பதில் படக்குழு உறுதியாக உள்ளதாம். ஏற்கனவே தீபாவளி ரிலீஸில் சிவகார்த்திகேயனின் அமரன் மற்றும் ஜெயம் ரவியின் பிரதர் ஆகிய படங்கள் துண்டு போட்டு வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்