சினிமாவில் 32 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்… ஸ்பெஷல் அப்டேட் கொடுத்த விடாமுயற்சி படக்குழு!

vinoth

சனி, 3 ஆகஸ்ட் 2024 (13:57 IST)
அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் மீண்டும் அஜர்பைஜானில் நடந்தது.

அங்கு சில ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அஸர்பைஜானில் எடுக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் செட் அமைத்து மீதமுள்ளக் காட்சிகளை படமாக்க உள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் சிக தினங்களுக்கு முன்னர் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. இந்த ஷூட்டிங்கோடு படத்தின் மொத்தக் காட்சிகளும் படமாக்கப்பட்டு நிறைவடையும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று அஜித் சினிமாவில் அறிமுகமாகி 32 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதை முன்னிட்டு விடாமுயற்சி படத்தின் ஸ்பெஷல் அப்டேட்டாக புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் “32 ஆண்டுகள் – தீராப் போராட்டங்களும், ஆறாத ரணங்களும்…. யாவையும் வெற்றிகொண்டு வெல்லும் விடாமுயற்சி” எனவும் தெரிவித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்