வாழா என் வாழ்வை வாழவே... உலகம் சுற்றும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்!

புதன், 27 அக்டோபர் 2021 (15:07 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். போனி கபூர் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கினாள் படப்பிடிப்புகள் தள்ளிச்சென்றது. இதனால் படம் வெளியீட்டு தேதியும் தாமதமாகி வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி படம் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் பைக்கில்  உலகம் சுற்றி வருகிறார் அஜித். 
ஏற்கனவே இதற்காக உலகைச் சுற்றிய பெண் ஒருவரிடம் ஆலோசனை கேட்டிருந்தார். இந்நிலையில் பல்வேறு இடங்களுக்கு சென்று அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. இதனை 96 படத்தில் விஜய் சேதுபதி ட்ராவலிங் செல்லும் வீடியோ பாடலான வாழா என் வாழ்வை வாழவே பாடல் வரிகளுடன் ஒப்பிட்டு மீம்ஸ் போட்டு வைரலாக்கியுள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்